புதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்
தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ளது.
எனவே, இந்த எண் பெறாத அரசு ஊழியர்களுக்கு, ஜூன் மாதம் முதல் சம்பளம், நிறுத்தி வைக்க வேண்டும், என நிதித் துறை பென்ஷன் பிரிவில் இருந்து, அனைத்து கருவூல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் கருணை அடிப்படையில், பணிக்கு சேர்ந்தவர்கள் குறித்து, எந்த விதக் குறிப்புகளும் இல்லை. எனவே, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் பெறாத, அரசு ஊழியர்களுக்கு ஜூன் மாதம் முதல் சம்பளம் கிடைக்காது.-