வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் இதற்குப் பதிலாக வங்கிகள் அளிக்கும் பிற சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம். இது அபராத கட்டணத்தை விட கூடுதல் சுமையாக வாடிக்கையாளர்களுக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டபோதிலும் இது இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று வங்கியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் எனும்போது, வங்கிகள் அளிக்கும் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று அர்த்தம் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் குறைந்தபட்ச தொகை அளவை வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் பராமரிக்கும்போது வங்கிச் சேவையைத் தொடரலாம் என்று ஆர்பிஐ சுட்டிக்காட்டியுள்ள தையும் வங்கியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அபராதம் விதிக்க வேண்டாம் எனும்போது அதைவிடக் கூடுத லாக பிற சேவைகளுக்கு வாடிக்கை யாளர்கள் செலுத்த வேண்டியிருக் கும் என்று பெயர் குறிப்பிட விரும் பாத தனியார் வங்கியின் நிர்வாக இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வாடிக்கையாளர் தனது சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்று என சில தனியார் வங்கிகள் வலியுறுத்துகின்றன.
இவ்விதம் வைக்கப்பட்டுள்ள தொகைக்கு குறைந்தபட்சம் 4 சதவீத வட்டி மூலம் ரூ.400 கிடைக்கும். இதற்கு ஈடாக ஆண்டு முழுவதும் வாடிக் கையாளர்களுக்கு காசோலை சேவை இலவசமாக வழங்கப் படுகிறது. மேலும் அவர் ஏடிஎம் பரிவர்த்தனை செய்ய முடியும். அத்துடன் வங்கிக் கணக்கில் உள்ள விவர அறிக்கையும் (ஸ்டேட் மென்ட்) அளிக்கப்படுகிறது. இத் தகைய சேவையை அளிக்க வேண்டுமெனில் வங்கிகளிடம் குறைந்தபட்சம் அவர் ரூ. 30 ஆயிரம் பராமரிக்க வேண்டும்.
வாடிக்கையாளர் நலன் முக்கி யம் என ஆர்பிஐ கருதினால், பிற சேவைகளுக்குக்கட்டணம் வசூ லிப்பதை தடுக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார். இந்த வகை யில் கட்டணம் செலுத்தத் தொடங் கினால், அது அபராதத் தொகை யைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். செயல்படுத்தப்படாத சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச தொகை பராமரிக்கப் படவில்லை என்பதற்காக அபரா தம் விதிக்கக்கூடாது என்றால், அதற் குப் பதிலாக பிற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று தான் அர்த்தம் என்று அவர் விளக்கம் அளித்தார்.
பிற சேவைகளுக்குக் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆர்பிஐ ஆராய்ந்து வருவதாக இந்திய வங்கியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வங்கிகள் லாபகரமாக செயல் பட வேண்டுமென்றால் எத்தகைய சேவையையும் இலவசமாக அளிக்க முடியாது. ஒவ்வொரு சேவைக்கும் கட்டணம் வசூலித் தாக வேண்டும். அப்போதுதான் லாபம் ஈட்ட முடியும். இதற்கு வாடிக் கையாளர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ. 20 ஆயிரம் பராமரிக்க வேண்டும் என்று மற்றொரு தனியார் வங்கித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத நிலை யில் அபராதம் விதிக்க வேண் டாம் என்று ரிசர்வ் வங்கி தெளிவு படத் தெரிவித்துள்ளது. இத்தகைய கணக்குகளை வைத்துள்ள வாடிக் கையாளர்கள் வங்கியிடமிருந்து ஒரு சில சேவைகளைத்தான் பெற முடியும் என்பது தெளிவான விஷயம் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.ஆர். காமத் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் தனியார் வங்கிகள் முடிவெடுத்துக் கொள்ள லாம். குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வங்கிக் கணக்குக ளுக்கு குறிப்பிட்ட சில சேவையை மட்டும் அளிக்கலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இத்தகைய கணக்குகளுக்கு ஏடிஎம் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது போன்ற வற்றை தீர்மானித்துக் கொள்ள லாம். குறைந்தபட்ச சேவை அளிக்கலாம் என்பது எவை, எவை என்று ஆர்பிஐ விரிவாக விளக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார பிரிவின் தலைவர் சௌம்ய காந்தி கோஷ் தெரிவித்துள்ளார்.
தனியார் வங்கிகளைக் கருத்தில் கொண்டே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரி கிறது. தனியார் வங்கிகள்தான் மிக அதிக அளவில் அபராதம் விதிப்ப தாக பாங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளை பராமரிப்பதற்கு ஆகும் செலவை ஈடுகட்டவே வங்கிகள் இத்தகைய அபராதத்தை விதிக்கின்றன.
ஒரு வங்கிக் கணக்கில் ரூ. 100 இருப்பு இருந்தாலும் அந்தக் கணக்கை நிர்வகிக்க வேண்டி யுள்ளது. இந்தத் தொகைக்கு 4 சதவீதம் வட்டி அளிக்க வேண்டும். இதைத் தவிர வேறு பரிவர்த்தனை இருக்காது. கம்ப்யூட்டர் புழக் கத்துக்கு வந்தபிறகு இதுபோன்ற கணக்குகளைப் பராமரிக்கும் செலவு குறைந்துள்ளது. இருப் பினும் இது வங்கிகளுக்கு செலவு தான். இதுபோன்ற வங்கிக் கணக்கு களை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்ப்பதற்காகத்தான் அபராதம் விதிக்கப்படுகிறது என்று பொதுத் துறை வங்கியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நலனைக் கருத் தில் கொண்டு இத்தகைய அபராதத் தைத் தவிர்க்கலாம். அதற்குப் பதி லாக கடன் வாங்கியவர்கள் முன் கூட்டியே திரும்ப செலுத்தும்போது சுழற்சி அடிப்படையிலான வட்டி விகிதத்தைக் கணக்கிட்டு எவ்வித அபராதமும் விதிக்காமல் வசூலிக் கலாம் என்று அவர் மேலும் கூறினார்.
வங்கிகளில் கடன் பெற்றவர் கள் முன்கூட்டியே கடனை திரும்ப செலுத்துவதில் வங்கிகளுக்குத் தான் நஷ்டம். ஆனால் பணம் திரும்பக் கிடைப்பது என்பது சாதகமான அம்சம். முன்கூட்டியே செலுத்துவது மோசமான முடி வல்ல. அதற்காக அவர்களுக்கு அபராதம் விதிப்பது முறையல்ல. இவ்விதம் அபராதம் விதிப்பது பணத்தை திரும்ப செலுத்துவோர் மன நிலையில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். எனவே இத்தகைய முன் தேதியிட்டு கடனை திரும்ப செலுத்தும் நடவடிக்கையை வங்கிகள் வரவேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
புளோட்டிங் ரேட் எனப்படும் சுழற்சி அடிப்படையிலான வட்டி விகிதம் சில கடன்களுக்கு அளிக்கப்படுகிறது. சிறு, நடுத்தர தொழில்களுக்கு சுழற்சி அடிப்படையிலான வட்டி வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு முன் தேதியிட்டு பணத்தை திரும்ப செலுத்துவது ரத்து செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் தனி நபர் கடன்களுக்கு நிரந்தர வட்டி வசூலிக்கப்படுகிறது.