Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Monday, 24 February 2014

வருமான வரி பற்றிய தகவல் அறிய புதிய இணையதளம் தொடக்கம்

வருமான வரி பற்றிய தகவல் அறிய புதிய இணையதளம் தொடக்கம் www.tnincometax.gov.in

வருமானவரி பற்றிய தகவல்களுக்கு புதிய இணையதளம் நேற்று தொடங்கப்பட்டது. ஒரு வாரத்தில் முழு வீச்சில் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருமானவரி துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்துக்கான புதிய இணையதளம் நேற்று சென்னை வருமானவரி அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. இந்த தொடக்கவிழாவில் வருமானவரி துறை இணை ஆணையர் பி.ஜெயராகவன் வரவேற்று பேசினார்.
அதன் பின்னர், வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி புதிய இணையதளத்தை ( www.tnincometax.gov.in ) தொடங்கிவைத்தார். இந்த இணையதளத்தை வருமானவரி துறை அதிகாரி கிருபாகரன் வடிவமைத்தார். இதில் புலனாய்வு பொது இயக்குநர் ஜெயசங்கர், வருமானவரி துறை முதன்மை ஆணையர்கள் சேத்தி, அப்ரோல், மிஸ்ரா, வருமானவரி துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வருமானவரி துறை மக்கள் தொடர்பு அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார். பின்னர் இதுகுறித்து வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்த இணையதளத்தில் அனைத்து உத்தரவுகள், சுற்றறிக்கைகள், பயிற்சி வகுப்புகள், செய்திகள், நடப்புகள், மேல்முறையீட்டு வழக்குகள் பற்றிய விவரங்கள் உள்பட பல்வேறு தகவல்களும் அடங்கியுள்ளன.
வருமானவரி தொடர்பான சலுகைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. மேலும் இந்த இணையதளம் தலைமையிடமான டெல்லி இணையதளத்தில் உள்ள தகவல்கள் இதில் இடம்பெற்றிருக்கும். இதில் ஒப்பந்த கோரிக்கைகளை (டெண்டர்) டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
வருமானவரி துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் இணையதள முகவரியையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இதன்மூலம் எங்களுக்கும், பொதுமக்களுக்கும் பணிகள் சுலபமாகும். தற்போது இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் முழு வீச்சில் செயல்படும்.
ஒரு சுற்றறிக்கையை ஒவ்வொரு அதிகாரிக்கும் தனி தனியே அனுப்புவதற்கு பதிலாக இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் போதும். அனைத்து அதிகாரிகளும் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.