Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Wednesday, 8 October 2014

ஆசிரியர் இயக்கக் குரல் சந்தா சேர்க்கை முனைப்பு விழா! விழுப்புரம் மண்டலம் சாதனை

ஆசிரியர் இயக்கக் குரல் சந்தா சேர்க்கை முனைப்பு விழா!
விழுப்புரம் மண்டலம் சாதனை!........
...................................................................................................................
விழுப்புரம்,திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களின்
சார்பாக நடைபெற்ற ஆசிரியர் இயக்கக் குரல் சந்தா சேர்க்கை முனைப்பு விழா (04.10.2014) சனிக்கிழமை அன்று எழுச்சியோடு நடைபெற்றது.

ஆசிரியர் இயக்கக் குரல் நிதியாக-இதழ் காப்பாளர்கள்,ஆயுள்
சந்தாதாரர்கள்,ஆண்டு சந்தாதாரர்கள் என மாவட்டம் வாரியாக,வட்டாரக்கிளைகள் வாரியாக அணிவகுத்து நின்று நமது
மதிப்புமிகு அகில இந்தியச் செயலாளர் அவர்களிடம் மாநிலப்
பொறுப்பாளர்கள் முன்னிலையில்............................................
ரூ 08,41,450 (ரூபாய் எட்டு இலட்சத்து நாற்பத்து
ஓராயிரத்து நானூற்று ஐம்பது ரூபாய் மட்டும்)
வழங்கி பெருமை சேர்த்துள்ளார்கள்.பாராட்டுகிறோம்,வாழ்த்துகிறோம்
மாவட்டம் வாரியாக........
விழுப்புரம்.............ரூ06,85,050. ஏற்கனவே ரூ15.000
திருவண்ணாமலை.......ரூ00,81,400 ஏற்கனவே ரூ20,000
கடலூர்.................ரூ 00,75,000 ஏற்கனவே ரூ10,000
........................
கூடுதல் ரூ08,41,450 முன் வரவு கூடுதல்ரூ45,000
விழுப்புரம் மண்டலத்தின் மொத்த கூடுதல் தொகை;ரூ 08,86,450
மாநிலத் துனைத்தலைவர் மற்றும் மாவட்ட,வட்டாரப்பொறுப்
-பாளர்களின் உழைப்பிற்கும், சாதனை நிகழ காரணமாக விளங்கும்
இயக்கக்குடும்பத்து உறவுகளுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.
சாதனையின் உச்சம்;
.............................................................................
.
விழுப்புரம் மாவட்டம்-உளுந்தூர்பேட்டை
வட்டாரக்கிளை 53 இதழ் காப்பாளர்களை வழங்கி ,தமிழ்நாட்டிலேயே
அதிக இதழ் காப்பாளர்களை வழங்கிய கிளை என்ற பெருமையுடன்
ரூ 03.21,000-ஐ உளூந்தூர்பேட்டை வட்டாரக்கிளையின் ஆசிரியர் இயக்கக்
குரல் நிதியாக வழங்கியுள்ளது.கிளையின் வட்டாரத்தலைவர்,
செயலாளர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்களையும் பாராட்டுகிறோம்.