தமிழ்நாடு தொடக்கக் கல்வி துறையில் கல்வி தகவல் மேலாண்மை முறை என்ற பெயரில் தனி நபர் தகவல் தொகுப்பு முறைக்கு ஆசிரியர்களின் பணி விவரங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
தொடக்கக் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணி விவரங்களை இணையதளத்தின் மூலமாக பதிவு செய்ய ஜனவரி 27ம் தேதி தொடக்கக் கல்வி இயக்கத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு பதிவு செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த பணியை மார்ச் 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் பணியாற்றும் அனைத்து அமைச்சு பணியாளர்களின் விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்யும் வகையில் கடந்த நவம்பர் மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு பதிவு செய்யும் பணி நடைபெற்றது. ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் விவரங்களை பதிவு வாரியாக மாவட்ட அளவில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மார்ச் 15ம் தேதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.