Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Saturday, 15 March 2014

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்

ஐபெட்டோவின் முயற்சியினால் ஒரு நாள் ஊதிய பிடித்த உத்தரவு நிறுத்தம் 

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதையடுத்து இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
இதையடுத்து தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.  மேலும் இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். 

14.03.2014 -தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன்
அகில இந்தியச்செயலாளர் திரு.வா.அண்ணாமலை அவர்கள் சந்திப்பு.

06.03.2014-டிட்டோஜேக் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு இம்மாதம் சம்பளப்பிடித்தம் இல்லை!
MEMO- அனுப்பக்கூடாது எனவும் அறிவிப்பு.

இன்று(14.03.2014)மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை திரு வா.அண்ணாமலை அவர்கள் சந்தித்து .......
டிட்டோஜேக் அடையாள வேலைநிறுத்தப்போராட்டம்(06.03.2014)
முறைப்படி அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட போராட்டம் என்பதால்......
வருமானவரி பிடித்தம் காரணமாக இம்மாத(மார்ச்-2014) சம்பளத்தில் வேலைநிறுத்தத்திற்கான சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டாம் எனவும்,குறிப்பானை வழங்க வேண்டாம் எனவும் இயக்குநர் அவர்களை கேட்டுக்கொண்டதின் பேரில்...

தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள், அனைத்து மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும்-டிடோஜேக் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இம்மாதம் சம்பளப்பிடித்தம் செய்யவோ,குறிப்பாணை வழங்கவோ வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளார்.
இயக்குநர் அவர்கள் உடனடியாக மேற்கொண்ட நடவடிக்கைக்கு அகில இந்தியச் செயலாளர் திரு வா.அண்ணாமலை அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-தமிழக ஆசிரியர் கூட்டணி.....!