அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம், மொத்தம், 3.76 லட்சம் மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பருவமழை பொழிய தவறியதால் சென்னை தவிர, பிற மாவட்டங்கள், வறட்சி மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழக அரசு, வன துறை மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பசுமைபடுத்தும் நோக்கத்துடன், மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கும், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில், வன துறை மூலம், 3.76 லட்சம் மரக்கன்று, என்.ஜி.ஓ.,க்கள் மூலம், 13.94 லட்சம் மரக்கன்று பெற இயலும். அந்தந்த மாவட்ட வனத்துறை மற்றும், என்.ஜி.ஓ.,க்கள் மூலம் மரக்கன்று பெற்று, ஒவ்வொரு பள்ளியிலும் மரக்கன்று நட்டு, அதனை வகுப்பாசிரியர்
பராமரிக்க வேண்டும். அதை பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.