Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Tuesday, 11 February 2014

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள துணை பேராசிரியர் இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின் மதிப்பெண் மற்றும் தகுதிப் பட்டியல்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள துணை பேராசிரியர் இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின் மதிப்பெண் மற்றும் தகுதிப் பட்டியல்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் குறித்து கருத்து கூற விரும்புவோர் 30ம் தேதி முதல் சென்னையில் ஆஜராக வசதியாக சென்னையில் 3 மையங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அமைத்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 துணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மே 28ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 19ம் தேதியில்இருந்து விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 10ம் தேதி வரை பெறப்பட்டன. பின்னர்சான்று சரிபார்ப்பு நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை சென்னையில் 3 இடங்களில் நடந்தது.சான்று சரி பார்ப்பில் 34 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.கற்பித்தல் அனுபவத்துக்காக 15 மதிப்பெண்ணும், பிஎச்டி பட்டத்துக்கு 9, நெட், ஸ்லெட் தேர்ச்சியுடன் எம்பில் பட்டம் பெற்றிருந்தால் 6, நெட், ஸ்லெட் தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் பெற்றிருந்தால் 5 மதிப்பெண் வழங்கப்பட்டன.சான்று சரி பார்ப்பில் கலந்து கொண்டவர்கள் பெற்ற மதிப்பெண்கள், தகுதியானவர்கள் பட்டியல் (பாடவாரியாக) ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்புவோர், தாங்கள் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட மையத்தின் மண்டல இணை இயக்குநர்கள், மண்டல அதிகாரிகள், முதல்வர்களை சந்தித்து கருத்துகளை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 25, 26ம் தேதிகளில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சென்னை, காயிதே மில்லத் அரசுபெண்கள் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில், இம்மாதம் 30ம் தேதி நேரில் ஆஜராகி தாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை தெரிவிக்கலாம்.
நவம்பர் 27, 28ம் தேதிகளில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காயிதே மில்லத் பெண்கள் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் 31ம் தேதியும், நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காயிதே மில்லத் பெண்கள் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில், பிப்ரவரி 1ம் தேதி நேரில் சென்று தெரிவிக்கலாம்.தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவிக்க செல்லும் போது, சான்று சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதங்களின் ஜெராக்ஸ் நகல் மற்றும் உரிய சான்றுகளுடன் செல்ல வேண்டும். நேர்க்காணலில் தகுதி பெற்றவர்களின் பட்டியல்கள் பாட வாரியாக விரைவில்ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.